வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (15:07 IST)

சாபாநாயகர் தனபால் தொடர்ந்து நீடிப்பாரா?

சேலம் அதிமுக பிரமுகர் சுகுமார் கடந்த 2007-இல் மரணமடைந்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த குற்றப் பத்திரிகையில் தமிழக சட்டசபை தலைவர் தனபாலின் பெயரும் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.


 
 
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகுமார் கடந்த 2007-இல் திடீர் நெஞ்சு வலி காரணமாக இறந்தார். இதில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல், செல்வகணபதி உட்பட சிலர் தடுத்ததால் தான் அவர் மரணமடைந்தார் என அப்போதைய துணை ஜெயிலர் அறிக்கை அளித்திருந்தார்.
 
இது தொடர்பான வழக்கு கடந்த 18 மாதங்களாக நடந்து வருகிறது. எனவே இதனை விரைந்து முடிக்க கைதிகள் உரிமை அமைப்பின் இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து வந்த சேலம் மாநகர குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் நாகப்பட்டினத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட போதும், அவர் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க ஏதுவாக உயர் அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறியதை பதிவு செய்வதாக கூறி இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
 
இந்த வழக்கில் அமைச்சர்கள், எட்ப்பாடி பழனிச்சாமி, தங்கமணி ஆகியோருடன் சேர்த்து சபாநாயகர் தனபால் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது பெயர் குற்றப் பத்திக்கையில் இடம் பெறும் பட்சத்தில் தனபாலின் சபாநாயகர் பதவிக்கு ஆபத்து வரும் என கூறப்படுகிறது.