தமிழக முதல்வர் நம்பர் ஒன் அடிமையா? விக்கிபீடியா செய்த சர்ச்சை

Sivalingam| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (04:40 IST)
தமிழக முதல்வராக நேற்று எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவர் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் முதல்வராக தொடர்வார், அல்லது அவர் பதவியிழப்பதோடு தமிழகத்தின் குழப்பம் தொடரும்இந்நிலையில் அவரது பதவியேற்பால் பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பது சமூக வலைத்தளங்களில் இருந்து வெளி வரும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சமி பதவியேற்ற மறுநிமிடம் விக்கீபீடியா இணையதளத்தில்  தமிழக முதல்வர்கள் பட்டியல் என்ற பக்கத்தில் முதல்வரை அடிமை நம்பர் 1 என்று தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிபீடியா பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அதாவது பிப்ரவரி 16, 2017 முதல் முதல்வராகிறார் என்றும், அவரது பெயரை K.Palanisamy (aka) விக்கிப்பீடியாவில் முகவரி வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தகவலை பதிவு செய்யலாம், எடிட் செய்யலாம் என்று இருப்பதால், இதை யார் பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விக்கிபீடியா நிர்வாகம் இதனை உடனடியாக திருத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :