Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரசு பேருந்துகளில் வைஃபை வசதி; அமைச்சர் அறிவிப்பு


Abimukatheesh| Last Updated: சனி, 8 ஜூலை 2017 (21:24 IST)
அனைத்து அரசு குளிர்சாதன பேருந்துகளிலும் விரைவில் வைஃபை வசதி வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

 
சட்டசபையில் இன்று பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
 
அனைத்து அரசு குளிர்சாதன பேருந்துகளிலும் வைஃபை வசதி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். சென்னையில் பசுமை விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 
 
மத்திய அரசு ‌அறிமுகம் செய்துள்ள புதிய வாகன கட்டுப்பாட்டுச் சட்டத்தை தமிழக அரசு மு‌ழுமையாக எதிர்க்கும். அதில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசை‌ முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :