Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சி நேரம் மாற்றம் ஏன்?


bala| Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:57 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஞாயிறு அன்று மதியம் ஒளிபரப்பாகி வருகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.  அந்த நிகழ்ச்சிக்கு முன்பு போல வரவேற்பு இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.

 

இது தொடர்பாக  நீயா நானா டீம் கூறுகையில், இந்த நிகழ்ச்சியை காணும் ரசிகர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஞாயிறு மதியம் நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து  நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பினால் புதிய ரசிகர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என கூறினர்.
 


இதில் மேலும் படிக்கவும் :