வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (22:46 IST)

பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது ஏன்?

பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது ஏன்?

திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி மீண்டும் போட்டியிடவில்லை.
 

 
திண்டுக்கல் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஒருவர் இரண்டு முறை மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பது அக்கட்சியின் விதி.
 
ஆனால், கடந்த தேர்தலில், மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர் என்பதால் மூன்றாவது முறையாக பாலபாரதிக்கு சிறப்பு ஒதுக்கீடு மூலம் சீட் வழங்கப்பட்டது.
 
ஆனால், இந்த முறை கட்சி விதி அதற்கு இடம் தராது என்று அக்கட்சியினர் உறுதிபட தெரிவித்துவிட்டனர்.