Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெஜாரிட்டியை நிரூபித்த பின்பு வாங்க: எடப்படியாருக்கு சசிகலா உததரவு


bala| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (15:26 IST)
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் சரியாகவில்லை. நாளை சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.முன்னதாக முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்த அவர் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.


 


எடப்படி பழனிச்சாமி பெங்களூர் வருவது குறித்து வழக்கறிஞர் சசிகலாவிடம் கூறினாராம். அதற்கு இப்போது அவர் இங்கு வரவேண்டாம். நாளை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்த பின்பு வர சொல்லுங்கள் என்று சசிகலா கூறினார். இதையடுத்தே பழனிச்சாமியின் பெங்களூர் பயணம் ரத்து செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :