வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (14:58 IST)

யார் இந்த வில்சன்? ஸ்டாலின் எம்பி பதவி வழங்கியது ஏன்?

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர் பி.வில்சன் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.

 
மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் உள்ள தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி, திமுகவுக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறும் தகுதி உள்ளது. இதில் ஒரு சீட் மதிமுகவிற்கு கூட்டணி ஒப்பந்தத்தின்படி சென்றுவிடும். 
 
அந்த வகையில், தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் வழக்கறிஞர் பி.வில்சன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி மறைந்த போது, அவரின் ஆசைப்படி அவரது உடலை அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய ஒரு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். 
 
அனால், எடப்பாடி பழனிச்சாமி இதற்கு அனுமதி வழங்கவில்லை. மாறாக அண்ணா பல்கலைக்கழகம் எதிரே உள்ள காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய 2 ஏக்கர் இடம் அளிப்பதாக தெரிவித்தார். 
இதனால், வேறு வழியின்றி இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. காலை 8 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது திமுக சார்பில் ஆஜாராகியவர் வழக்கறிஞர் பி.வில்சன். 
 
திமுக சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை கேட்டு பின்னர் நீதிமன்றம் திமுகவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கை வெற்றிபெற செய்தற்காக வழக்கறிஞர் வில்சனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.