யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? ஆளுநர் ஆலோசனை


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:55 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் சென்னைக்கு புறப்படும் முன், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


இன்னும் சற்று நேரத்தில் சென்னை வரவுள்ள ஆளுநர் விதயாசாகர் ராவ், சென்னை புறப்படும் முன் டெல்லியில், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமா மிரட்டி நிர்பந்தம் செய்ததால் நடந்தது என்றும், அதிமுக கட்சியில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் கூறினார். இதையடுத்து அவருக்கு சட்டப்படி என்ன வாய்ப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் அவரது பெரும்பான்மையை  நிரூபிக்க வாய்ப்பு வழங்க முடியுமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :