1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (13:43 IST)

சுவாதியின் தந்தை யார்? விஷத் தகவலை பரப்பும் தமிழச்சி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுவாதிக்கு ஆதரவாகவும், ராம்குமாருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.


 
 
கொலை செய்யப்பட்ட சுவாதி பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் இந்த வழக்கில் பலர் தங்கள் வசதிக்கேற்றவாறு விஷத்தகவலை பரப்பி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்தில் தொல்.திருமாவளவனுக்கும், எச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உருவபொம்மை எரிப்பு எல்லாம் நடந்தேறியது. வாட்ஸ்அப் புகழ் யுவராஜ் வெளியிட்ட ஆடியோவில் சுப.வீரபாண்டியன், திமுக தலைவர் கருணாநிதி, திருமாவளவன், ராம்குமார் ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
 
இதற்கும் எதிர்ப்புகள் கிளம்பி யுவராஜ் மீது சுப.வீரபாண்டியன் காவல்துறையில் புகார் அளித்தார். சமூக வலைதளங்களில் பலரும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் மிகவும் துடிப்பாக, பெண்ணியம், மனித உரிமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசும் தமிழச்சி சுவாதி கொலை குறித்து அவரது பக்கத்தில் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அவரது பதிவில், சுவாதியின் அப்பா என கூறப்படும் சந்தான கோபாலகிருஷ்ணன் அவருடைய அப்பா இல்லை என கூறியுள்ளார். சந்தான கோபாலகிருஷ்ணனின் மனைவியின் தங்கைக்கும் வேறொரு (கணவர்) நபருக்கும் பிறந்தவர் தான் சுவாதி என கூறியுள்ளார்.


 
 
சுவாதி ஒரு முஸ்லீம் இளைஞனை திருமணம் செய்ய இருந்ததால், அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டார் என கூறிய தமிழச்சி அவரது தந்தை ரயில் நிலையத்தில் அழாததையும், அடையாள அணிவகுப்பின் போது அழுததையும் விமர்சித்துள்ளார். ராம்குமார் அப்பாவி, அவர் இந்த கொலையை செய்யவில்லை, சிக்கவைக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
 
இவரின் இந்த பதிவு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் பகிரப்பட்டுள்ளது. பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து எதிர்ப்புகளையும், ஆதரவையும் கூறிவருகின்றனர்.
 
சந்தான கோபாலகிருஷ்ணனின் மனைவியின் தங்கை ரெங்கநாயகிக்கு பிறந்தவர் தான் சுவாதி என கூறும் தமிழச்சி சந்தான கோபால கிருஷ்ணனின் மனைவி யார் என்பதை கூறியிருக்கலாமே. ஆனால் அதை கூறவில்லை. ஒரு வீடியோவில் சுவாதியின் தந்தை ரயில் நிலையத்தில் அழாமல் நின்று கொண்டிருந்ததை விமர்சிக்கும் தமிழச்சி ரயில் நிலையத்தில் தன் மார்பில் அடித்து அவர் அழும் வீடியோவை பார்க்கவில்லையா?.
 
முன்னர் ரயில் நிலையத்தில் சுவாதியின் தந்தை அழவில்லை என கூறும் அவர், அடையாள அணிவகுப்பின் போது சுவாதியின் தந்தை ராம்குமாரிடம் என் பொண்ண ஏன் கொன்னேன்னு கதறிய போதும் சுவாதியின் அப்பா இவரில்லை என்று சொல்ல காவல்துறையினருக்கு வாய்வரவில்லை என ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தை கூட சந்தேகப்படுகிறார்.
 
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிரப்பட்டுள்ள இந்த பதிவில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணான் இல்லை என்பதை எந்த ஆதரத்தின் அடிப்படையில் கூறினார், யார் அவருடைய மனைவி என்பதை அவர் விளக்கி இருக்க வேண்டும்.
 
இப்படி ஆதாரமில்லாமல் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விஷத்தகவலை பரப்பும் பெண்ணியம் பேசும் தமிழச்சிக்கு நாம் கேட்கும் கேள்வி எத்தனை முறைதான் சுவாதியை கொலை செய்வீர்கள்.