1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (05:31 IST)

ஜெயலலிதா யார்? நடிகை குஷ்பு ஆவேசம்

ஜெயலலிதா யார்? நடிகை குஷ்பு ஆவேசம்

முதல்வர் ஜெயலலிதா குறித்து, நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு  ஆவேச கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
ஈரோட்டில்,  தமாகாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் இணையும் விழா  நடைபெற்றது.
 
இந்த விழாவில் கலந்து கொண்ட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு காட்டமாக பதில் அளித்தார். அப்போது அவர்  கூறுகையில், நான் ஒரு நடிகை தான். ஒத்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியை நம்பி நான் உள்ளேன். என்னை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் என்னை நடிகையாக பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டராகவே பார்க்கிறார்கள்.
 
ஆனால், ஜெயலலிதா யார்? அன்னை தெரசாவின் குடும்பத்தை சேர்ந்தவரா? அல்லது அன்னிபெசன்ட் அம்மையாரின் உறவினரா? இது எவுதும் இல்லையே. அவரது பின்னால் தான் அதிமுகவினர் உள்ளனர் என காட்டமாக பதில் அளித்தார்.