1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (15:04 IST)

ஜெயலலிதாவின் மரண தருவாயில் செயற்கை சுவாசத்தை நீக்கியது யார்?: மைத்ரேயன் கேள்வி!

ஜெயலலிதாவின் மரண தருவாயில் செயற்கை சுவாசத்தை நீக்கியது யார்?: மைத்ரேயன் கேள்வி!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என குடியரசு தலைவரை ஓபிஎஸ் அணியில் உள்ள 12 எம்பிக்கள் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.


 
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்பி, டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அதன் பிறகு உயிர் பிரியும் நேரத்தில் ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் அகற்றப்பட்டிருக்கிறது. அதை அகற்ற அனுமதி அளித்தது யார்? என கேள்வி எழுப்பினார்.
 
பொதுவாக இந்த அனுமதியை நோயாளியின் ரத்த சம்மந்தம் கொண்டவர்கள்தான் எடுக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தது யார்?. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே மரணமடைந்ததால் அவர் சீரியசாக இருந்தபோது, அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்த ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களுடன் மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.
 
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை செய்யவில்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்த குடியரசு தலைவர் முடிவு செய்வார் என மைத்ரேயன் தெரிவித்தார்.