வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (11:36 IST)

மணல் கொள்ளையில் வருவாய் துறையினரும் உடந்தை?

கொடைக்கானலில் ஆற்று மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், இதற்கு வருவாய் துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொடக்கானல் அருகே உள்ள கள்ளாறு ஆற்றின் மணலை, சட்டத்திற்கு புறம்பாக சிலர் பல வருடங்களாக திருடி வருவதாகவும், இதற்கு வருவாய் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த தொடர் மணல் திருட்டால் கொடைக்கானலின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு தொடர் மழை பெய்தால் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு, மணல் கொள்ளையில் ஈடுபடுபர்களையும், இதற்கு துணைபோகும் வருவாய் துறையினரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.