Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உணவில் ரகசியமாக கலக்கப்பட்டது என்ன?: கோர்ட்டுக்கு செல்லும் ஆதாரம்!

அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உணவில் ரகசியமாக கலக்கப்பட்டது என்ன?: கோர்ட்டுக்கு செல்லும் ஆதாரம்!


Caston| Last Modified செவ்வாய், 27 டிசம்பர் 2016 (09:45 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

 
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் சசிகலா புஷ்பா.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதே சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா. ஜெயலலிதாவின் கையெழுத்து முறைகேடாக பயன்படுத்தப்படலாம் என ஆளுநருக்கு கடிதம் எழுதினார். சசிகலாவை நேரடியாக பல விவகாரங்களில் குற்றம் சாட்டி வருகிறார் சசிகலா புஷ்பா.
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதற்காக பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா. இந்நிலையில் சசிகலா புஷ்பா ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது நடந்த சில ரகசியங்களை கூறி வருகிறார்.
 
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் ஒன்று சசிகலா புஷ்பா வசம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆதாரத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஜெயலலிதா மரணமடைவதற்கு முன்னர் கோவில் பிரசாதம் என்று உணவோடு சேர்த்து ரகசியமாக கொடுக்கப்பட்ட தீர்த்த ரகசியங்கள் உள்ளதாக சசிகலா புஷ்பா தரப்பு கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :