Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இறுதிச் சடங்கில் பக்கெட்டில் பால் ஊற்றிய சசிகலாவின் விசுவாசம் இதுதான்!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2017 (23:02 IST)
இறுதி சடங்கில் பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து அப்படியே பால் ஊற்றுகிறீர்கள். அப்படியென்றால் 33 ஆண்டுகளாக நீங்கள் செய்த வேலையின் பலன் என்ன. உங்களுக்கு என்ன விசுவாசம் இருந்தது? என்று அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலரவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி அளித்துள்ள பேட்டியில், “தீபா என்ன உங்களிடத்திலே சொத்தா கேட்டார். அத்தைக்கு சடங்கு செய்ய வேண்டுமென்று கேட்டார். அதற்கு கூட நீங்கள் அனுமதிக்கவில்லை.
 
இன்றைக்கு சொல்கிறார் நடராஜன், தீபாவும் தீபக்கும் எங்களது குழந்தைகள். எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்வோம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் உங்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது அதற்காக கீழே இறங்கி வருகிறீர்கள்” என்று தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறுகையில், “சசிகலா ஜெயலலிதாவிடம் வேலை செய்தார்கள், விசுவாசமாக இருந்தார்கள் என்பது உண்மைதான். இறுதி சடங்கில் எப்போதும் பித்தளை சொம்போ, வெள்ளி சொம்போ அல்லது ஏதாவது ஒரு சொம்பிலே வைத்து ஊற்றுவார்கள். அதுதான் சம்பிரதாயம்.
 
நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து அப்படியே ஊற்றுகிறீர்கள். அப்படியென்றால் 33 ஆண்டுகளாக நீங்கள் செய்த வேலையின் பலன் என்ன. உங்களுக்கு என்ன விசுவாசம் இருந்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :