சசிகலாவை முன்மொழிய ஓ.பி.எஸ்-க்கு என்ன உரிமை இருக்கிறது: சீறும் ஆனந்தராஜ்


லெனின் அகத்தியநாடன்|
சசிகலாவை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களுக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்தராஜ், ‘’சட்டமன்றக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் ஏன் இத்தனை அவசரம் என்று தெரியவில்லை. நடக்கின்ற ஆட்சியே நன்றாகத்தானே ஜனநாயக முறைப்படி போய்க்கொண்டிருந்தது.
 
தெருத்தெருவாக சென்று வெயிலில் அலைந்து வாக்குசேகரித்தவன் நான். அதனால், எனக்கு இது குறித்து பேச உரிமை இருக்கிறது.  முதலமைச்சர் என்கிற பொறுப்பு மக்கள் தருகிற பொறுப்பு. தயவுகூர்ந்து அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.
 
சசிகலாவை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களுக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது. அவர் வாக்களித்த மக்களை கேட்டிருக்க வேண்டும். மறு தேர்தல் வந்து மக்கள் தேர்ந்தெடுத்தால் என் முதல்வரும் அவர்தான்’’ என்று தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :