வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (19:05 IST)

’போக்சோ சட்டம்’ பாலியல் வழக்கில் பரிச்சயமான வார்த்தை; முழுமையான அர்த்தம் தெரியுமா?

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்த சமூகத்தில் அதிகமாகி வரும் சூழ்நிலையில், இந்த வழக்குகளால் நமக்கு அதிகம் பரிச்சயமான வார்த்தை ’போக்சோ சட்டம்’. இந்த சட்டத்தை பற்றிய முழு விவரம் தெரியுமா? இதில் தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. போக்சோ சட்டம் குறித்த முழு விவரம் பின்வருமாறு..
 
1. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழி செய்வது போக்சோ சட்டம். 
2. இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை கொடுக்க வேண்டும். 
3. இந்த சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி குறிப்பிட்ட வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும். 
4. குற்றம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை, புகார் வந்த உடனையே போலீஸார் விசாரணையை துவங்கலாம். 
5. பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று போலீஸார் விசாரணை நடத்தலாம். அதேபோல் காவல்நிலைய எல்லை  காரணம் காட்டி விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது. 
6. இந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிகளை காவல்துறை மீறினால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்வதற்கு போக்சோ சட்டம் இடம் அளித்துள்ளது.