வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (12:55 IST)

போலீசார் இப்படித்தான் நடந்து கொண்டார்கள்: தோலுறிக்கும் பத்திரிகையாளர்!

போலீசார் இப்படித்தான் நடந்து கொண்டார்கள்: தோலுறிக்கும் பத்திரிகையாளர்!

ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரத்தில் முடிவடைந்ததையடுத்து தமிழக காவல்துறை மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. பல அரசியல் கட்சி தலைவர்கள் கலவரம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.


 
 
இந்நிலையில் இந்த கலவரத்தை நேரில் பார்த்த அதனால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் பிரபல தமிழ் வாரஇதழ் ஒன்றுக்கு கலவரத்தில் என்ன நடந்தது என பேட்டியளித்துள்ளார்.
 
அதில், 23-ஆம் தேதி காலையில் போராட்டத்தின் மைய பகுதியான விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே செய்தி சேகரிக்க சென்றிருக்கிறார் அந்த பத்திரிகையாளர். அப்போது போராட்டம் செய்தவர்களை கலைந்து போகுமாறு மயிலாப்பூர் துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
போலீஸின் தொடர் பேச்சுவார்த்தையால் ஒரு கட்டத்தில போராட்டத்தில் ஈடுபட்ட பாதிபேர் கலைய ஆரம்பித்தார்கள். மீதமுள்ளோர் கடலை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள். பின்னர் மீனவர் கிராமத்துல இருந்து தண்ணியும் உணவுப்பொருட்களும் கடல் வழியே போராட்டக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டது.
 
ஆனால் அந்த உணவுப் பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தது. போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற பையனை போலீசார் அடித்துள்ளனர். அதையும் அந்த பத்திரிகையாளர் படம் எடுத்துள்ளார். பின்னர் 12 மணியளவில் ஐஸவுஸ் பகுதியில் இருந்து பெரிய அளவில் புகை வந்துள்ளது.
 
போலீஸ் நிலையம் பக்கத்தில் வாகனங்கள் எரிந்துகொண்டு இருந்தது. அதன் பின்னர் அருகில் ஏதே பிரச்சனை என கேள்விப்பட்ட அந்த பத்திரிகையாளர் அங்கு சென்றுள்ளார். அங்கு நுழைந்ததுமே முன்னணி நாளிதழ் ஒன்றின் புகைப்பட கலைஞரை போலீசார் வெளியே அழைத்து வந்தனர்.
 
அவரை போலீசார் கடுமையா அடித்துள்ளனர். அவரது கால் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது கேமிராவும் சேதப்படுத்தப்பட்டது. மற்றுமொரு தொலைக்காட்சி செய்தியாளரையும் தாக்கியிருக்கிறார்கள். அவரை ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துவிட்டு கலவர பகுதிக்கு சென்றுள்ளார் அந்த பத்திரிகையாளர்.
 
அங்கு வீடுகளுக்குள் புகுந்த போலீசார் அங்கிருந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். மேலும் அங்கிருந்த பெண்களையும் மோசமான வார்த்தைகளால் திட்டி அவர்களையும் தாக்கினர். அங்கும் இங்குமாக சிலரை இழுத்து கொண்டு போன காவல்துறை கையில் கிடைப்பவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர்.
 
நடந்த சம்பவங்களை படம் எடுதுக்கொண்டு இருந்த அந்த பத்திரிகையாளரை பார்த்த போலீஸ், மிகவும் கேவலமான அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தையால் திட்டி எங்களையாடா படம் எடுக்கிற என கூறி அவரது கேமராவை பறிக்க வந்துள்ளனர். எல்லாருமே பட்டாலியன் போலீஸ்தான்.
 
10 பேருகிட்ட அந்த பத்திரிகையாளர் தனியாக மாட்டியுள்ளார். கேமராவில் இருந்து மூன்று படங்களை அழித்த பின்னரும் போலீசார் கேமராவில் இருந்து சிப்பை வெளியே எடுத்து அதை உடைத்து நாசமாக்கியுள்ளனர். என நடந்த விவரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார் அந்த பத்திரிகையாளர்.