வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (05:28 IST)

மகாமகம் திருவிழா: என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா? விஜயகாந்த் ஆவேசம்

மகாமகம் திருவிழா: என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா? விஜயகாந்த் ஆவேசம்

மகாமகம் திருவிழாவுக்கான முழு பாதுகாப்பு பொறுப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
 

 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீர்த்தவாரியின் போது புனித நீராடிய பக்தர்கள் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி குளத்தில் மூழ்கி பலியானார்கள்.
 
25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இது போன்று வரும்  சிறப்பான தை அமாவாசை என்பதால் முதல் நாள் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் நீராட  குவிந்தனர். ஆனால், அவர்களின் பாதுகாப்பு குறித்து அதிமுக அரசு அக்கறை கொள்ளவில்லை.
 
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, வரிசையாக சென்று பக்தர்கள் நீராட, சுவாமி தரிசனம் செய்ய, ஆபத்தான நேரத்தில் முதலுதவி செய்ய முன்னேற்பாடுகள் இல்லை.
 
சில ஆயிரக்கணக்கில் கூடிய கூட்டத்திலேயே இதுபோன்ற உயிர்பலி என்றால், கும்பகோணத்தில் நடைபெற உள்ள பல லட்சம் பக்தர்கள் குவியும் மகாமகத்தில் விழாவில் பாதுகாப்பிற்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்ன செய்ய போகிறார்?
 
மகாமக விழா உள்கட்டமைப்பு பணிகள் மோசமாகவும், தரமில்லாமலும் உள்ளது. எனவே, பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ளது.
 
எனவே, அதிகாரிகளின் மீது பழியை போடாமல் முதல்வர்  என்ற முறையில் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.