Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறையா? அல்லது மாநில விடுமுறை மட்டுமா?: நடிகர் கருணாகரன் கேள்வி


bala| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (13:07 IST)
கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 


பொங்கல் விழாவை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்துகொள்ளலாம் என மத்திய அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  மத்திய அரசு ஊழியர்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு  நடிகர் கருணாகரன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காந்தி ஜெயந்தி எப்படி இந்திய விடுமுறையா? அல்லது ஒரு  மாநில விடுமுறை மட்டுமா? என்று பதிவிட்டுள்ளார்.


 


இதில் மேலும் படிக்கவும் :