மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!
இன்று மதியம் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் சில நாட்களுக்கு மழை பெய்யும் என ஏற்கனவே இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்
அதேபோல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
Edited by Mahendran