வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (19:23 IST)

திமுக, அதிமுக கூட்டணியில் எந்தக் காலத்திலும் சேரமாட்டோம் - ராமதாஸ் பேட்டி

திமுக, அதிமுக கூட்டணியில் எந்தக் காலத்திலும் சேரமாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து நிருபர்களின், திமுக, அதிமுக கூட்டணியில் மீண்டும் சேரமாட்டீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய ராமதாஸ், ”எந்த காலத்திலும் சேரமாட்டோம்” என்று தெரித்தார்.
 
பாமக, பாஜக உங்கள் கூட்ணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், பாமக தலைமையை ஏற்று யார் வந்தாலும், எந்தக் கட்சி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார்.
 
மேலும், பாமகவை மக்கள் நிச்சம் ஏற்றுக் கொள்வார்கள். திமுக, அதிமுக ஆட்சியை மக்கள் மாற்றி மாற்றி பார்த்து விட்டார்கள். இதனால் ஒரு மாற்றத்தை பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.மக்கள் 47 வருடமாக மாற்று அணியை தேடிவருகிறார்கள்.
 
மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த மாற்றத்தை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே தரமுடியும். மற்ற கட்சிகளால் தரமுடியாது.
 
காங்கிரஸ் கட்சியால் மாற்றம் தரமுடியாது. பாஜக இன்னும் தமிழகத்தில் வளரவில்லை. வைகோ கட்சியில் தொண்டர்கள் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளால் முடியாது. விஜயகாந்த் கட்சியால் முடியாது.
 
நாங்கள் 26 வருடமாக அரசியல் செய்து வருகிறோம். தி.மு.க., அ.தி.மு.கவை தவிர்த்து பாரதிய ஜனதா கட்சியை விட, நாங்கள் தான் பெரிய கட்சி. எங்கள் துணை இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.