Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒசாமா பின்லேடன் படத்தை வைத்திருந்தது உண்மைதான்.. ஆனால்? - வாலிபர்கள் பேட்டி

வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:58 IST)

Widgets Magazine

ஒசாமா பின்லேடன் படம் பொதிக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது நாங்கள்தான். ஆனால் அதற்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கூறியுள்ளனர்.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் ஒன்றுகூடி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். அந்த போராட்டம் போலீசாரால் கலைக்கப்பட்டது. அப்போது கலவரங்களும் வெடித்தது. 
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த போலீசார், போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து விட்டனர். எனவே, தடியடி நடத்தினோம். அப்போது சிலர் ஒசாமா பின்லேடன் புகைப்படத்தை வைத்திருந்தனர் எனக் கூறி புகைப்படத்தை வெளியிட்டனர். அந்த புகைப்படத்தை பா.ஜ.க. வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் இதை பதிவு செய்திருந்தார். 
 
மேலும், சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இதுபற்றி பேசினார். ஆனால், அதன்பின் அந்த புகைப்படத்திற்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செய்தி வெளியானது. எனவே இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என ஓ.பி.எஸ் சட்டசபையில் பின்வாங்கினார்.  
 
இந்நிலையில், போலீசாரின் விசாரனையில் பின்லேடன் புகைப்படம் பொறித்த இருசக்கர வாகனத்தில் சென்றது இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சலாவுதீன் மற்றும் மாபு பாஷா என்பது தெரிய வந்தது.  கடந்த டிசம்பர் மாதம், தேசிய லீக் கட்சியின் சார்பில், நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்களிம் போலீசார் விசாரணை செய்து வந்தார்கள்.
 
இந்நிலையில், தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம், சலாவுதீன் மற்றும் மாபு பாஷா ஆகியோரோடு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதில், இவர்கள்தான் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி, பாஜக அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள இவர்கள் வந்த போதுதான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இதைக்கண்டதும், நான் உடனடியாக அந்த புகைப்படத்தை கிழிக்க சொன்னேன். அவர்கள் உடனேயே அதை அகற்றி விட்டனர்.
 
ஆனால், ஹெச். ராஜா போன்ற அரசியல்வாதிகளும், போலீசாரும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டதாக ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இவர்களுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  முதல்வர் ஓ.பி.எஸ் சட்டசபையில் இதுபற்றி பேசுகிறார். போலீசார் தீவிர விசாரணை செய்கிறார்கள். எங்கள் மக்களை அடியோடு அழித்துவிட அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள் என கூறினார்.
 
மேலும், நாங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பாஜக அலுகவலத்தை முற்றுகையிட சென்ற போதுதான் அந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்றோம். இதை போலீசாரிடம் கூறிவிட்டோம். ஆனாலும், போலீசாரால் எங்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என சலாவுதீன்,  மாபு பாஷா ஆகிய இருவரும் செய்தியாளர்களிடம் கூறினர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அமெரிக்காவை பின்பற்றும் குவைத்: விசா வழங்க மறுப்பு!!

பாகிஸ்தான், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு விசா ...

news

ட்ரம்புக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு: 40 சதவீதம் உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே ...

news

அழகற்ற பெண்கள்தான் வரதட்சணைக்கு காரணம்: பள்ளி பாடநூலில் விளக்கம்

அழகற்ற ஊனமுற்ற பெண்களுக்கு திருமணம் நடைப்பெறுவது கடிணம், அவர்களால் தான் இன்றும் வரதட்சணை ...

news

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி - நாட்டு இன மாடுகளுக்கு திடீர் மவுசு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் மீண்டும், காங்கேயம் இனம் உள்ளிட்ட நாட்டு ...

Widgets Magazine Widgets Magazine