Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐந்தே விஷயம் தான், அதிமுக எங்களுக்கு தான்: அடித்து சொல்கிறார் மாஃபா பாண்டியராஜன்!

ஐந்தே விஷயம் தான், அதிமுக எங்களுக்கு தான்: அடித்து சொல்கிறார் மாஃபா பாண்டியராஜன்!


Caston| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (17:58 IST)
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய பஞ்சாயத்து தற்போது தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது.

 
 
அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற சசிகலா அணி, ஓபிஎஸ் அணி மல்லுக்கட்டி வருகிறது. இதில் இரு அணியினரின் விளக்கத்தையும் பெற்ற தேர்தல் ஆணையம் இரு அணியினரையும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை வைக்க உத்தரவிட்டுள்ளது.
 
வரும் 22-ஆம் தேதி இரு அணியினரும் ஆஜராக உள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், தேர்தல் ஆணையரை சந்திக்கும் போது ஓபிஎஸ் அணி சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த மாஃபா பாண்டியராஜன், 22-ம் தேதி தேர்தல் ஆணையரை சந்திக்கும்போது, சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் 2 மாதங்களுக்குள் தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 
மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுச்செயலாளருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களுடன் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கூட்டு தலைமையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாகவும் இரட்டை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :