வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (00:33 IST)

’நவீனா மரண விஷயத்தை சும்மா விடப்போவதில்லை’ - பாமக வழக்கறிஞர் பாலு சூளுரை

நவீனா மரண விஷயத்தை நாங்கள் சும்மா விடப்போவதில்லை என்று பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிருமான பாலு கூறியுள்ளார்.
 

 
ஜூலை மாதம் 30ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான நவீனாவின் வீட்டிற்குள் புகுந்த செந்தில் என்ற இளைஞர் பெட்ரோலை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணையும் கட்டிப்பிடித்தார்.
 
இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் அன்றே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நவீனா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
 
மாணவியின் உடலுக்கு பாமக முன்னாள் எம்எல்ஏ குரு, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குரு, ”படிக்க வேண்டிய வயதில் தொந்தரவு செய்ததால் நவீனா படிப்பை தொடர முடியாமல் போனது.
 
நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லுகிறோம் நாடகக் காதல் என்று. இல்லை என்று மறுத்து சில அமைப்புகளும், சில தலைவர்களும் கூறி வந்தனர். இப்போது என்ன பதில் சொல்வார்கள்” என கேள்வி எழுப்பினார்.
 
பின்னர் பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிருமான பாலு பேசுகையில், “இதனை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் போகிறோம்.
 
விரும்பாத பெண்ணையும் விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் தொடங்கி, கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்கு காரணமானவர்கள் தான்” என்று கூறியுள்ளார்.