ஆர்.கே. நகருக்கு வந்தால் சசிகலாவுக்கு அடி விழும்: கொந்தளிக்கும் மக்கள்! (வீடியோ இணைப்பு)

ஆர்.கே. நகருக்கு வந்தால் சசிகலாவுக்கு அடி விழும்: கொந்தளிக்கும் மக்கள்! (வீடியோ இணைப்பு)


Caston| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:11 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்ததை அடுத்து பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்.

 
 
ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக யார் வருவார் என பெரிதும் எதிர்பார்கப்பட்டது. சசிகலாவுக்கு கட்சியின் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
 
மேலும் ஜெயலலிதாவின் இரத்த உறவான அவரது அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து ஒரு தரப்பினரும் செயல்பட்டு வந்தனர். இதனால் அதிமுக தலைமை பொறுப்பை யார் வகிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
 

நன்றி: விகடன்
 
இந்நிலையில் இவர்களுக்கான ஆதரவு பொதுமக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என தனியார் வார இதழ் ஒன்று பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக கருத்து கூறினர்.
 
மேலும் சசிகலாவுக்கு பொதுமக்களிடம் ஆதரவே இல்லை. அவர்களில் சிலர் முதல்வர் ஜெயலலிதா கடைசியாக தேர்தலில் நின்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா வந்தால் அவருக்கு அடிதான் விழும் என்றனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :