1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (13:42 IST)

கல்லூரியில் விழுந்தது வெடிகுண்டா? அல்லது விண்கல்லா? - நாசா, இந்திய விஞ்ஞானிகள் முரண்

கல்லூரியில் விழுந்தது வெடிகுண்டா? அல்லது விண்கல்லா? - நாசா, இந்திய விஞ்ஞானிகள் முரண்

தனியார் பொறியியல் கல்லூரியில் விழுந்தது வெடிகுண்டா அல்லது விண்கல்லா என்பது குறித்து நாசாவும், இந்திய விஞ்ஞானிகள் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
 

 
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விழுந்தது விண்கல் தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாட்டறம்பள்ளி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 6ந் தேதி மர்ம பொருள் விழுந்து வெடித்து சிதறியதில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார்.
 
அந்த பொருள் விழுந்த இடத்தில் 6 அடி ஆழத்துக்கு பள்ளமும் ஏற்பட்டது. வானத்திலிருந்து வானவில் போன்று அந்த பொருள் வந்து விழுந்ததாக அங்குள்ள பணியாளர்கள் கூறினர். இதுகுறித்து பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
 
இறந்த காமராஜின் உடலில் காயங்கள் வித்தியாசமாக இருந்ததால் உடலை வாணியம்பாடி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படாமல் வேலூர் மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
 
உடலின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டதோடு உடலில் ஒட்டியிருந்த மண் மற்றும் அவரது உடைகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
 
இந்நிலையில் கல்லூரிக்கு விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் வந்தனர். காவனூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் முனீர் தலைமையில் 10 பேரும், சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வெங்கடாசலம் தலைமையில் 6 பேரும், திருச்சி நேஷனல் கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமையில் 5 பேரும் 3 குழுக்களாக பிரிந்து நவீன கருவிகளை கொண்டு அங்கிருந்த மண், சிதறிய கற்களை ஆய்வு மேற்கொண்டனர்.
 
கல்லூரி வளாகத்தில் விழுந்தது விண்கல்லாக தான் இருக்கும். வெடிகுண்டாக இருக்க வாய்ப்பில்லை என ஆய்வில் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஆனால், அது விண்கல் அல்ல என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரியில் விழுந்தது விண்கல்லா அல்லது வெடிகுண்டா என்பது குறித்த மர்மம் நீடித்து வருகிறது.