செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (13:39 IST)

தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 144 தடை உத்தரவு - பிரவீன் குமார்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் 24 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரத்தை கட்சிகள் முடிக்க வேண்டும். அதன்பின்னர், பொதுக்கூட்டம், தெருமுனை, மீடியா, நிகழ்ச்சிகளில் பிரச்சாரம் செய்ய கூடாது. வீடு வீடாக ஓட்டு கேட்பதற்கு தடையில்லை. நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது. வாக்குப்பதிவு மையங்களுக்கு 100 மீட்டர் தொலைவிற்குள் போதையுடன் யாரும் வரக்கூடாது. சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை கட்டுப்படுத்துவது கடினமான விஷயம்.
 
தேர்தல் தொடங்குவதற்கு முன்புவரை பறக்கு படை சோதனையில் ஈடுபடும். 7 ஆயிரம் பறக்கும் படையினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் குறித்த விளம்பரங்களை நாளை மறுநாள் வரை பத்திரிகைகளில் வெளியிடலாம். விரும்பத்தகாத சம்பங்கள் நடைபெறாவண்ணம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள்  ஏற்படுத்தப்படுள்ளன.
 
முறையான கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்கள் மூலம் வாக்க்குகளை வாக்களர்கள் பதிவு செய்யலாம். பணம் வாங்காமல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை மனசாட்சியுடன் பதிவு செய்யவேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.