1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (11:39 IST)

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: 18,200 பேர் புகார் மனு

வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மொத்தம் 18,200 மனுக்கள் வந்துள்ளதாகவும் இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.


 

 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்றும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
 
தேர்தலுக்காக தமிழகத்திற்கு பீகார், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து 45,000 வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 35,000 எந்திரங்கள் இன்றும் ஒருவாரத்தில் கொண்டுவரப்படவுள்ளது.
 
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
ஜனவரி 31 ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் பெயர் நீக்க கோரி 17 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
 
இதே போல் ஆன்லைன் மூலம் 1,200 புகார்கள் வந்துள்ளது. மொத்தம் 18,200 மனுக்கள் மீதும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
 
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 
திங்கட்கிழமை முதல் இந்த பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
 
 தமிழகத்தில் போலி வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் கூறியதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.