ஒரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள்: இல.கணேசன்


K.N.Vadivel| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (04:47 IST)
திமுக மற்றும் அதிமுகவுக்கு மாறிமாறி ஓட்டு போட்ட மக்களிடம், இந்த ஒரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்து பிரச்சாரம் செய்வோம் என இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, நாகர்கோவிலில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
திமுக மற்றும் அதிமுகவுக்கு மாறிமாறி ஓட்டு போட்ட மக்களிடம், இந்த ஒரு முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வோம்.
 
பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த எங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் கூட்டணி குறித்து சந்தித்து பேசியுள்ளோம். விரைவில் பாஜக கூட்டணி முடிவாகும் என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :