Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திமுக பொதுக்குழு எப்போது?: கருணாநிதி வீடு திரும்புவதால் தொண்டர்கள் உற்சாகம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:00 IST)
காவேரி மருத்துவமனையில் உடல்நிலைக் குறைவுக் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் ஆவதால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 7ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை குறைப்பதற்காக 'டிரக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், கருணாநிதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது போன்ற புகைப்படமும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை [23-12-16] கருணாநிதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த திமுகவின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :