Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வைத்திலிங்கம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்: செம கடுப்பில் விவேக்!

வைத்திலிங்கம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்: செம கடுப்பில் விவேக்!


Caston| Last Updated: வியாழன், 16 நவம்பர் 2017 (09:41 IST)
இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தி முடித்திருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னணியில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இருப்பதாக விவேக் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
இந்த வருமான வரி சோதனையை நடத்த அழுத்தம் கொடுத்து இந்த ரெய்டு நடக்க காரணமாக இருந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என சிலர் சசிகலா வட்டாரத்தில் கூறுகின்றனர். அவர்தான் எங்கே சொத்துக்கள் இருக்கிறது, யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற 187 பேர் லிஸ்ட்டையும் அவர்தான் கொடுத்தார் என கூறுகின்றனர்.
 
ஆனால் விவேக் தரப்பு இதனை நம்ப மறுக்கிறது. எடப்பாடி ரெய்டு நடத்த அழுத்தம் கொடுத்திருக்கிலாம், ஆனால் எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கு, யாரு வீட்டுல எல்லாம் ரெய்டு நடத்தலாம் என்பதை அவரால் சொல்லி இருக்க முடியாது.
 
அவருக்கு இந்த விவரங்கள் எதுவுமே தெரியாது. எங்கள் ஆணி வேர் எங்கே என்ற விபரமெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை. கார்டனில் இருந்தவன் என்ற முறையில் இது எனக்கு நல்லாவே தெரியும் என அடித்து கூறுகிறார் விவேக். ஆனால் வைத்திலிங்கம் தான் இதை செய்திருக்க முடியும் என்ற முழுமையாக நம்புகிறார் விவேக். அவருக்கு தான் இந்த 187 பேர் விபரம் எல்லாம் தெரியும்.
 
விவேக் டெல்லியில் உள்ள சிலரை தொடர்பு கொண்டு கேட்டதில் தான் அவருக்கு வைத்திலிங்கம் வைத்த அதிர்ச்சி வைத்தியம் தெரிய வந்துள்ளது. சசிகலா குடும்பத்தை பற்றியும், அந்த குடும்பம் சார்ந்தவர்கள், நண்பர்கள் என எல்லா தகவல்களும் வைத்திலிங்கம் மூலமாகத்தான் வருமான வரித் துறைக்கு போயிருக்கிறது.
 
டெல்லியில் அவர் தங்கியிருந்தபோது நேரடியாகவே ஒரு பட்டியலைக் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த பட்டியலை வைத்துதான் வருமான வரித்துறை ரெய்டுக்கு திட்டமிட்டதாக டெல்லியில் இருந்து விவேக்கிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் வைத்திலிங்கம் மீது விவேக் செம கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :