Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆடிய ஆட்டமென்ன! என்ன ஒரு அலங்காரம்: சசிகலா தண்டனை பெற்றதை கொண்டாடிய விசு!

ஆடிய ஆட்டமென்ன! என்ன ஒரு அலங்காரம்: சசிகலா தண்டனை பெற்றதை கொண்டாடிய விசு!


Caston| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:59 IST)
இயகுனரும், நடிகருமான விசு கடந்த தினங்களுக்கு முன்னர் சசிகலாவுக்கு எதிராக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவின் ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தார். அப்போது சசிகலா தரப்பினர் செய்த அட்டூழியங்களை அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

 
 
மேலும் ஓ.பன்னிர்செல்வத்துக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் இருந்து தமிழகத்தை சசிகலாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார் விசு. இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை கிடைத்து பெங்களூர் சிறைக்கு செல்ல உள்ளார்.
 
இதனை விசு வரவேற்று கவிதை வடிவில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
 
ஆடிய ஆட்டமென்ன!
கூட்டிய கூட்டமென்ன!
 
என்ன ஒரு அலங்காரம்!
என்ன அகங்காரம்!
 
அம்மாவை படுத்திய பாட்டிற்கு
தண்டனை!
 
தகுதியை மறந்து
தன்னலம் கருதியவர்க்கு
தண்டனை!
 
நீதி நிலைத்தது
நிதி பிழைத்தது
 
ஒட்டு மொத்த
தமிழகமும் செய்த
பிரார்த்தனை
வீண் போகவில்லை!
 
கடவுள் இருக்கின்றான்
நமது கண்ணுக்குத்
தெரிவதில்லை.
 
தமிழ்நாடு தப்பித்தது.
 


இதில் மேலும் படிக்கவும் :