1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (18:35 IST)

அம்மா பெயரை மிஸ்யூஸ் பண்றாங்கோ - நடிகர் விஷால்

நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு தவறாக பயன்படுத்தி இருக்கிறார் , இது கண்டிக்கத்தக்கது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவரணியினருக்கு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை என்பதற்காக தங்களது ஆதரவு சரத்குமார் அணியினருக்கு  என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு நேற்று தெரிவித்தார். அப்பொழுது சமரசத்திற்கு யார் கூப்பிட்டாலும் பாண்டவரணியினர் வரமாட்டர்கள் என்றும் தமிழ முதலமைச்சர் அம்மா கூப்பிட்டாலும் சமரச பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரமாட்டர்கள் என்றும் தாணு குறிப்பிட்டார். இதற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 
முதல்வரை தங்கள் அணியினர் மதிக்கவில்லை என்று தாணு தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து தவறான தகவலை தற்போது  அவர் பரப்பு வருகிறார் என்றும் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.
 
திரைப்பட துறைக்கு பல நல்ல விஷயங்களையும், தமிழ் நடிகர், நடிகைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் நடிகர் விஷால் குறிப்பிட்டார்.