வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (12:52 IST)

தேர்தல் அதிகாரியிடம் அடிக்கடி செல்போனில் பேசியவர் யார்? - விஷால் பரபரப்பு பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு பல களோபரங்கள் மற்றும் திருப்பங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.


 
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷால் கூறியதாவது:
 
எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. என் பின்னால் தினகரன், கமல்ஹாசன் இருப்பதாக கிளப்பி விடுகிறார்கள். அதில் உண்மையில்லை. என் வேட்புமனுவில் கையெழுத்திட்ட சுமதி என்ற பெண்ணை விட்டு விடுங்கள். அவருக்கு மேலும் மேலும் தொல்லை கொடுக்க வேண்டாம்.
 
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல் முறை. இனிமேல், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்துள்ளனர். தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை பெறவே நான் தேர்தலில் போட்டியிட்டேன் எனக் கூறுவது தவறான கருத்து.
 
இரண்டு கையெழுத்தை காட்டி என்னை நிராகரித்துள்ளனர். என்னால் ஆயிரம் கையெழுத்து வாங்க முடியாதா என்ன?. இதற்கு பின் சதி இருக்கிறது. 
 
தலைமை அதிகாரியிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரிடம் சிலர் செல்போனில் அடிக்கடி பேசினர். அதன் பின்னே அவர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அவரிடம் பேசியது யார் என்பதை அவர்தான் கூற வேண்டும். எனக்கு நடைபெற்றது நாளை யாருக்கும் நடைபெறக்கூடாது. என் வேட்பு நிராகரிக்கப்பட்டதற்கு எனக்கு காரணம் தெரிய வேண்டும். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
 
நான் அரசியல் தொடங்குவது பற்றி மக்கள் முடிவு செய்யட்டும். அதிகாரியை மாற்றுவதால் ஒன்று ஆகப்போவதில்லை. மீண்டும் வேறொரு நபரை நியமித்து அதே வேலையைத்தான் செய்வார்கள். சட்ட வல்லுனர்களிடம் பேசி வருகிறேன். அடுத்து என்ன செய்வது என முடிவெடுப்பேன்" என விஷால் கூறினார்.