செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.n.vadivel
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (15:33 IST)

திருநங்கைகளோடு சங்கமம் ஆன நடிகை ஷகீலா

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் நிகழ்சியில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவரான மோகனாம்பாள் நடிகை ஷகிலாவை தன் மகளாகத் தத்தெடுத்தார்.
 
விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அங்கு ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.  இவர்களுக்காக கடந்த மூன்று தினங்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 
 
இந்த நிகழ்ச்சிகளில் முக்கிய போட்டியாக கருத்தப்படும் மிஸ் கூவாகம் போட்டி  கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் தமிழகம் மட்டும் இன்றி, இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் 72 திருநங்கைகள் போட்டியில் குதித்தனர். இதில், நடையழகு, உடையழகு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முதல் சுற்றில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
பின்பு, அந்த 12 பேரில் சிறப்பான நடை, உடை அழகுடன் கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை பிரவீனா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.  
 
இவரைத் தொடர்ந்து, அடுத்த இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுஜீயும், 3 வது  இடத்தை மதுரையைச் சேர்ந்த ஹரீனியும் பெற்றனர்.


 
 
மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டது குறித்து மதுரை பிரவீனா கூறுகையில், நான் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.  இந்த நாள் நான் என்றும் மறக்க முடியாத நாளாகும். நாங்களும் மனிதர்கள் தான். நீங்கள் எங்களை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
 
நடிகை ஷகிலாவை தன் மகளாகத் தத்தெடுத்தார் திருநங்கைகள் சங்கத்தின் தலைவரான மோகனாம்பாள். நடிகை ஷகீலா திருநங்கைகள் மீது வைத்துள்ள மரியாதையை கண்டு அங்கிருந்த திருநங்கைகள் கண்கலங்கினார்கள்.