1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 15 மே 2017 (07:00 IST)

அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி: விழுப்புரத்தில் பரபரப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியின் அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கமும் இணைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் சுமார் 70% பேருந்துகள் இயங்கவில்லை. எனவே தமிழகம் முழுவதும் பயணிகள் கடும் அவதியில் உள்ளனர்



 


இந்த நிலையில் சற்று முன்னர் விழுப்புரம் பணிமனையில் ஓட்டுனராக பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுனர் ஹென்றி என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனை கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து அவர் குதித்ததாகவும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை அரசு கட்டாயப்படுத்தி வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள விடாமல் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சக பயணிகள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.