தொண்டர் கன்னத்தில் 'பளார்'.. மீண்டும் களம் இறங்கிய கேப்டன்..


Murugan| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (11:55 IST)
தேமுதிக சார்பில் பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில், தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறைந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது..

 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்டம் தோரும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இந்த நிகழ்ச்சி நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது...
 
அதில் கலந்து கொண்ட விஜயகாந்த், தொண்டர்களுடன் உரையாடினார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அதன்பின் நிகழ்ச்சி முடிந்து மதியம் அவர், அங்கிருந்து புறப்பட்டு செல்வதற்காக தனது காரின் அருகில் வந்தார். அப்போது, தேமுதிக தொண்டர் ஒருவர், விஜயகாந்தின் காதின் அருகில் ‘கேப்டன் வாழ்க’ என கோஷமிட்டார். 
 
இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அவரின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.  இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது.  அறை வாங்கியவர்,  ‘தலைவர் என்னை செல்லமாகத்தான் அறைந்தார்’ எனக் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :