வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (12:02 IST)

நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை நல்லவர்களுக்கு மட்டுமே என் ஆதரவு: விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, மக்களுக்காக மக்கள் பணி என்ற வறுமை ஒழிப்பு திட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது,

நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று சொல்வது சரியல்ல. வாக்களிப்பது ரகசியம். நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை நல்லவர்களுக்கு மட்டுமே என் ஆதரவு என்று கூறினார். மேலும் தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் தி.மு.க., அ.தி.மு.க. பிறகட்சிகளை வளரவிடுவது இல்லை. எங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது. எங்கள் கட்சிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.