அரசு பேருந்து டிக்கெட்டில் விஜயகாந்த் பெயர்: சென்னையில் பரபரப்பு


Bala| Last Modified வியாழன், 14 ஜனவரி 2016 (11:46 IST)
சென்னையில் அரசு பேருந்து டிக்கெட்டில் விஜயகாந்த் பெயர் அச்சிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.

 

சென்னை குரோம்பேட்டையில் ஏறிய பயணி ஒருவர் தான் செல்லவேண்டிய இடத்திற்கு டிக்கெட் வாங்கியுள்ளார். பின்னர் அவர் டிக்கெட்டை பார்த்தபோது அதில் விஜயகாந்த் என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தாராம். தற்போது அந்த படம் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தவறு எவ்வாறு நடந்தது என்று  நடத்துனருக்கும் தெரியவில்லை. அல்லது போட்டோஷாப் மூலம் அதனை தயார் செய்து விஷமிகள் சமூகவலைதளங்களில் பரவ விட்டனரா என்றும் தெரியவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :