வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 30 மார்ச் 2015 (14:57 IST)

விஜயகாந்த் சட்டசபைக்கு வந்தார்; கையெழுத்திட்டார்; சென்றார்

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் இன்று சட்ட சபைக்கு வந்து கையெழுத்திட்டவுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
 
இன்று காலை 11.25 மணியளவிர் தலைமை செயலகத்தின் 10 ஆம்  நம்பர் கேட் வழியாக விஜயகாந்த் சட்டசபையில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு வெளியில் வந்து காரில் ஏறி சென்று விட்டார்.
 
முன்னதாக, 4 ஆம் நம்பர் கேட் அருகே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு வராமல் விஜயகாந்த் சென்றார். இதனால் அங்கிருந்த பலர் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். தனது கட்சி எம்.எல்.ஏ.க்களைக்கூட சந்திக்காமல் விஜயகாந்த் சென்று விட்டாரே என்று திகைத்தனர்.
 
இந்நிலையில், சுமார் 15 நிமிடங்கள் கழித்து விஜயகாந்த் மீண்டும் தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களிடம் சென்றார். "ஏன் இன்னும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எழுந்து வாருங்கள்." என்று கூறினார்.
 
இதை தொடர்ந்து தே.மு. தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தை கைவிட்டடனர்.
 
பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
சபாநாயகர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தே.மு.தி.க.வுக்காக வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்துகிறார். அ.தி.மு.க. அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட எங்கள் எம்.எல்.ஏ.க்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்துகிறது.
 
இங்கு நடப்பது போல், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறுவது இல்லை. பொதுவாக பட்ஜெட் ரகசியமாக தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக சட்டசபையிலேயே முதலமைச்சர் சொல்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.