1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 16 ஜூலை 2014 (10:21 IST)

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சட்டப்பேரவையில் சவால்: சபாநாயகர் எச்சரிக்கை

சமூக நலத்துறை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சட்டப்பேரவையில் சபாநாயகர் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.
 
சமூக நலத்துறை மீதான விவாதத்தில் கலந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சட்டப்பேரவையில் நேற்று பேசினார். அப்போது உண்மைக்கு மாறான தகவல்களை அவர் கூறியதாக அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். மேலம், அவர் பேசியவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்.  விஜயதாரணி பேசியது அவைகுறிப்பில் இந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் கூறினார். 
 
இதுபோல் மூன்று முறை நடந்ததைத் தொடர்ந்து விஜயதாரணி பேச்சை முடிக்கும்படி கூறிவிட்டு, மானிய கோரிக்கைக்கு அமைச்சர் வளர்மதி பதில் அளிக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அப்போது விஜயதாரணி தனக்கு ஒரு நிமிடம் பேச வாய்ப்பு கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.

இதைத் தொடர்ந்து  விஜயதாரணி தொடர்ந்து இப்படி கேட்டுக் கொண்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் என்று சபாநாயகர் கூறினார். எந்த நடவடிக்கை வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று விஜயதாரணி கூற, எனக்கே சவால் விடுகிறீர்களா, சபையை அமைதியாக நடத்த விரும்புகிறேன் என்று கூறி. அமைச்சரை தொடர்ந்து பேச கேட்டுக்கொண்டார். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.