வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (20:09 IST)

போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியிலேயே காற்றில் பறக்க விடப்படும் விதிமுறைகள்?

கரூர் நகரில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

இந்நிலையில் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் மட்டுமில்லாமல், போக்குவரத்து துறையினரும் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியிலேயே காவல்துறையினரும், போக்குவரத்து துறையினரும் எந்த வித நடவடிக்கை எடுக்காமல், அப்படியே அமைதி காத்திருப்பது ஏனோ ? என்று தெரியவில்லை.
 


பெரும் விபத்துகள் எதுவும் நிகழாத வண்ணம் இந்த சம்பவங்கள் தெரியாத நிலையில், முன் கூட்டியே எதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பாவி மாணவ, மாணவக்குழந்தைகளின் நலன் காக்கப்படும் என்கின்றனர். ஆனால் இதே சம்பவம் கடந்த ஆண்டு நடக்கும் போது அப்போதைய காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தோடு, அறிவுரையும் கூறுவார். ஆனால் தற்போதைய காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அப்படி எதாவது ஆட்டோக்களில் அளவிற்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றினால் எனது செல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கின்றேன் என்று கூறியதோடு, சரி, அவ்வளவு தான்.  அதாவது காவல்துறை கொடுத்த எண்ணிற்கு கூப்பிட்டாலும் எடுப்பதில்லை. அவரது பர்ஷனல் எண்ணிற்கு கூப்பிட்டாலும் சரி எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை, இனியாவது எடுக்குமா ?

மேலும், தொடர்ந்து அதிக அளிவில் பள்ளிக்குழந்தைகள் ஏற்றி வரும் வாகனங்களின் உரிமம் மற்றும் ஒட்டுநரின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தும் அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.


கரூரிலிருந்து சி.ஆனந்த குமார்