விஜயபாஸ்கர் மனைவியின் ஒப்புதல் வாக்குமூலம்: சிக்கலில் அமைச்சர்!

விஜயபாஸ்கர் மனைவியின் ஒப்புதல் வாக்குமூலம்: சிக்கலில் அமைச்சர்!


Caston| Last Modified ஞாயிறு, 11 ஜூன் 2017 (09:52 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியது. அப்போது அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் எந்த வரி ஏய்ப்பும் செய்யவில்லை என பேட்டியளித்தார்.

 
 
அதன் பின்னர் வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரை தங்கள் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி, தந்தை என அவர்களிடமும் நடைபெற்றது.
 
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தி வரும் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதை அவரின் தந்தை மற்றும் மனைவி ஆகியோர் வருமான வரித்துறையினரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
 
புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் விஜயபாஸ்கர் நடத்தி வரும் மணல் குவாரிகள், கல்வி நிறுவனங்கள், அங்கு அவருக்கு உள்ள நிலங்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதை அவரின் தந்தை ஒப்புக்கொண்டார்.
 
மேலும். சென்னையில் விஜயபாஸ்கர் மனைவியிடம் நடத்திய விசாரணையில், பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார். இதன் மூலம் ரூ.21 கோடி அளவிற்கு அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அந்த மாவட்டங்களில் நடந்த வந்த விசாரணை, தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :