1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 10 ஜூன் 2017 (09:20 IST)

ரூ.21 கோடி வரி ஏய்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ஒப்புதல்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தி வரும் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதை அவரின் தந்தை மற்றும் மனைவி ஆகியோர் வருமான வரித்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.


 

 
கடந்த ஏப்ரல் மாதம், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.  ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறையினருக்கு சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை.
 
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் விஜயபாஸ்கர் நடத்தி வரும் மணல் குவாரிகள், கல்வி நிறுவனங்கள், அங்கு அவருக்கு உள்ள நிலங்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில் அவரின் தந்தை வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார். அதேபோல், சென்னையில் விஜயபாஸ்கர் மனைவியிடம் நடத்திய விசாரணையில், பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதை விஜயபாஸ்கரின் மனைவி ஒப்புக்கொண்டார். 
 
இதன் மூலம் ரூ.21 கோடி அளவிற்கு அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அந்த மாவட்டங்களில் நடந்த வந்த விசாரணை, தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.