1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (21:11 IST)

மறியலில் ஈடுபட முயன்ற விஜயதரணி, கம்யூ. எம்.எல்.ஏ. அண்ணாதுரை காயம்

மத்திய அரசை கண்டித்து தலைமைச்செயலகம் முன் மறியலில் ஈடுபட முயன்ற விஜயதரணி உட்பட எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு காயம் ஏற்பட்டது.
 

 
சட்டசபையில் எதிர்கட்சி எம்எல்ஏக்கள், நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்தும், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவும் வலியுறுத்துத்தினர். ஆனால்,  சபாநாயகர் பேச அனுமதி கொடுக்கததால் தலைமைச் செயலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
 
தமிழக சட்டப் பேரைவையில் மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் திடீரென எழுந்து மத்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை எடுத்துக்கொண்டு, நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை ஆதரித்தும், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவும் வலியுறுத்துத்தினர்.
 
அந்த பிரசுரங்களில் மத்திய அரசே விவசாயிகளின் மானியங்களை வெட்டாதே என எழுதி இருந்தது. ஆனால் சபாநாயகர் பேச அனுமதி கொடுக்கவில்லை. உடனே கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பாமக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட படி தலைமைச் செயலக வெளியில் உள்ள சாலைமறியல் நடத்த வேகமாக சென்றனர். ஆனால் காவல் துறையினர் தடுப்பு கம்பிகளை வைத்து அவர்களை தடுத்தி நிறுத்தினர்.
 
மேலும் வாகனங்களை நிறுத்த உபயோகப்படுத்தப்படும் இரும்பு குழாயையும் கயிறும் கொண்டு வந்தனர். அப்பொழுது அருகே இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி மீதும் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. அண்ணாதுரை மீதும் தலையில் இடித்து காயம் ஏற்பட்டது.
 
காவல்துறையினர் மேலும் அவர்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதால். வழியிலேயே அமர்ந்து  எதிர் கட்சி எம்எல்ஏக்கள் மறியலில் ஈடுபட்டனர்.