வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (17:30 IST)

புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம்

குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 10 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்து வந்த வாய்க்கால்கள் பயன்பெறும் திட்டம் தான் புஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் – கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள புஞ்சை புகலூரில் காவிரி ஆற்றில் ரூபாய் 490 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு ஆய்வு பணிகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், புஞ்சை புகலூர் புதிய கதவணை மூலம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஏற்கனவே ரூபாய் 220 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இரு ஒன்றியங்களிலும் குடிநீர் பிரச்சனை தீர்வுக்கு வரும். இதேபோல் தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட 14 ஊராட்சிகளில் 274 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் 81.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
 


அதேபோல் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 30 கோடி செலவில் அனைத்து சாலைகளும்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அமையவுள்ள இந்த கதவணை மூலம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள வாங்கல் மற்றும் மோகனூர் பாசன வாய்க்கால்கள் கடந்த 10 ஆண்டுகளாக பயன்படாமல் உள்ளது.  இனி அந்த நிலை மாறும். இரண்டு பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் வாய்க்கல் மூலம் பாசன வசதியும் அப்பகுதி மக்களுக்கு  குடிநீர் பிரச்சனைக்கும்  தீர்வுக்கு வரும். வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள புஞ்சை புகலூரில் காவிரி ஆற்றில் ரூபாய் 490 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை அமைய உள்ளது இதற்காக முழு முயற்சி எடுத்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கும் கரூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

சி.ஆனந்தகுமார்