Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக்ரம் ரசிகர் மன்ற தலைவரை குத்திக் கொன்ற விஜய் ரசிகர்கள்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 1 பிப்ரவரி 2017 (15:34 IST)
நாமக்கல்லில் ரசிகர் மன்றம் வைப்பது தொடர்பான தகராறில்,  விக்ரம் ரசிகர் மன்ற தலைவரை கொன்ற விஜய் ரசிகர்கள் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் தூசூரை சேர்ந்த  மணிகண்டன் (21) எருமப்பட்டி ஒன்றியத்தின் நடிகர் விக்ரம் ரசிகர் மன்றம் தலைவராக இருந்து வருகிறார். அவர், அப்பகுதியில் கபடி பயிற்சியாளராகவும் உள்ளார். இதற்கிடையில் அவர் தூசூரில் நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்பகுதியில், இராமச்ச்திரன் (28) என்பவர், ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் அமைத்து அதன் தலைவராக இருந்து வருகிறார். இதனால், இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இரவு மணிகண்டன், தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, நண்பர்களுடன் அங்கு வந்த இராமச்சந்திரன், மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து, இராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மணிகண்டனை சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த மணிகண்டனின் நண்பர்கள் பழனிசாமி, அஜித் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

அதில், படுகாயம் அடைந்த மணிகண்டன், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, இராமச்சந்திரன், ராஜேஷ் (19), மணிகண்டன் (24), கருணாமூர்த்தி (24), ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், இராமச்சந்திரனின் தம்பி, இரகுராமன் (25) என்பவரையும் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :