Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“ஆளுநர் மத்திய அரசுக்கு ’அந்த மாதிரி’ அறிக்கை அனுப்பவில்லை”


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 11 பிப்ரவரி 2017 (01:33 IST)
ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

 

நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவ், காவல்துறை ஆணையர் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் சூழல் குறித்து கேட்டு அறிந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் அறிக்கை ஒன்றினை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாகவும், அந்த அறிக்கையில் அதிகாரிகள், காவல்துறை தந்த தகவல்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு நேற்று முன்தினம் [புதன்கிழமை] இரவே அறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :