வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 டிசம்பர் 2014 (07:55 IST)

திரைப்பட இயக்குநர் ’இயக்குநர் இமயம்’ கே.பாலச்சந்தர் சென்னையில் மரணம்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதுபெரும் திரைப்பட இயக்குநர் ’இயக்குநர் இமயம்’ கே.பாலச்சந்தர் சென்னையில் மரணமடைந்தார்.
 

 
கே.பாலச்சந்தர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் முதன்முதலாக 1965ஆம் ஆண்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களை வைத்து இயக்கிய ‘நீர்க் குமிழி’ முதல் 2006ஆம் ஆண்டு உதய்கிரண், விமலா நடிப்பில் வெளியான ‘பொய்’ வரையில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியியுள்ளார்.

நீர்க் குமிழி, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, வெள்ளி விழா, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறது என்று எத்தனையோ புதுமையான கதாப்பாத்திரங்களை திரையில் நிஜமாக்கியவர் கே.பி.
 

 
தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, ஒரு வீடு இரு வாசல், கல்கி என்று எத்தனையோ சமுக அக்கறையுள்ள கதைகளை திரைத்துறையில் புகுத்தியவர் கே.பி.
 
 
மேலும் அடுத்தப் பக்கம்...

ஸ்ரீ பிரியா, விஜயகுமார், படாபட் விஜயலெட்சுமி, சரத்பாபு, ஸ்ரீ தேவி, ஜெயப்பிரதா, ஸ்ரீ வித்யா முதல் ராதாரவி, சுஜாதா, விவேக், பிரகாஷ்ராஜ், பிரியாமணி வரை ஏராளமான நடிகர், நடிகைகளை சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தியவர் கே.பி.

 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில் பிறந்து, மாநில அரசு விருது, தேசிய விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர் விருது முதல் பத்ம ஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது வரை எண்ணற்ற விருதுகளை பெற்றவர் இயக்குநர் கே.பாலச்சந்தர்.
 

 
இத்தகைய பாலச்சந்தர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  தனது திரைக்கதையை எழுதி முடித்துச் சென்றுவிட்டார்.