வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (15:22 IST)

பதவி விலக தயார் - அமைச்சர் வேலுமணி பேட்டி

தன் மீதான குற்றத்தை நிரூபித்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத்தயார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

 
உள்ளாட்சி துறை தொடர்பான அரசு ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி அமைச்சர் வேலுமணி பல கோடி ஆதாயம் பெற்றுள்ளார் என டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு, பினாமி பெயரில் நிறுவனங்கள் நடத்தி ஒப்பந்தங்களை அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
எனவே, வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும்,  இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், திமுக தரப்பு நீதிமன்றத்திற்கு செல்லும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வேலுமணி ‘என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது. அதை நிரூபித்தால் நான் அமைச்சர் பதவியை விட்டு விலக தயார். அதேபோல், திமுகவினர் மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. எனவே, ஸ்டாலின் அவரின் திமுக தலைவர் பதவியை விலக வேண்டும். அவர் விலகினால் நானும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன்” என அவர் கூறினார்.